கூட்டாட்சி அரசு பதவி வகிக்கும் கடந்த 40 மாத காலத்தில் நிலவி வரும் பண வீக்கத்தினால் இலங்கையின் மொத்த கடன் தொகை மேலும் 836 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
2014ம் ஆண்டு மஹிந்த அரசின் போது கடன் தொகை 7.4 ட்ரில்லியன் ரூபாவாகவே இருந்ததாகவும் 2017 இறுதியில் அது 10.3 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் கடந்த மூன்று வருடங்களில் 39 வீத கடன் தொகை அதிகரித்ததன் காரணத்தை அரசாங்கமே மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உருவாக்கி வைத்த கடன் சுமையினாலேயே நடைமுறை அரசு திணறிக்கொண்டிருப்பதாகவும் 2020ல் எல்லாம் சரியாகி விடும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment