
கள்ளச்சாராயம் காய்ச்சும் குழுவொன்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக 15,000 ரூபா லஞ்சம் பெற்ற நிலையில் மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவத்தகம உணவகம் ஒன்றில் வைத்து லஞ்சத் தொகையைப் பெறும் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் பின்னணியில் அங்கு சென்று காத்திருந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் பணம் கைமாறும் போது கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment