சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் பர்வானியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகை அல்-ரய் தகவல் வெளியிட்டுள்ளது.
வதிவிட அனுமதி சில நாட்களுக்கு முன்னர் காலாவதியாகியுள்ள அதேவேளை அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் ஒரு வருடத்திற்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பதியப்பட்டுள்ள நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக குறித்த நபர் மீது குற்றஞச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment