சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1000 புத்தர் சிலைகளுக்கு வரி விலக்கு அளித்து அவற்றை விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
வெசக்கை முன்னிட்டு பின் தங்கிய இடங்களுக்கு விநியோகிக்கவென சீன நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் கொண்டுவரப்பட்ட 1000 புத்தர் சிலைகளுக்கு 3.2 மில்லியன் ரூபா வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவை முடக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மங்கள தலையிட்டு, வரி விலக்குக்கு உத்தரவிட்டுள்ளதையடுத்து குறித்த சிலைகளை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment