மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக சர்வதேச சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நாணாயக்கார.
குரூப் 16 உறுப்பினர்கள் அரசை விட்டு விலகியுள்ள போதிலும் தொடர்ந்தும் மைத்ரிபால சிறிசேனவைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர்களை மஹிந்த அணியில் இணைத்துக் கொள்வதும் ஆரோக்கியமில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மாத்திரமன்றி பொதுத் தேர்தலிலும் மஹிந்த அணியே வெற்றி பெறும் என்பது திண்ணம் எனவும் இதனை தடுக்கும் நோக்கில் சர்வதேச சதித் திட்டம் அரங்கேறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment