தூதர்களை வெளியேற்றிக் கொள்ளும் துருக்கி - இஸ்ரேல் ! - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 May 2018

தூதர்களை வெளியேற்றிக் கொள்ளும் துருக்கி - இஸ்ரேல் !


பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலியர்களின் கண்மூடித்தனமான  தாக்குதலினால் 62 பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ள நிலையில் இஸ்ரேல் தூதரை வெளியேறுமா துருக்கியும், துருக்கி தூதரை வெளியேறுமாறு இஸ்ரேலும் பணித்துள்ளன.


இந்நிலையில், வெளியேற்றப்பட்ட இஸ்ரேல் தூதர் துருக்கி விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் போன்று பாதுகாப்பு கெடுபிடிகளுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பிலும் இஸ்ரேல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 11ம் திகதி இஸ்ரேலின் சுதந்திர தின விழா துருக்கி அரச பிரதிநிதிகள் பங்கேற்புடன் இஸ்ரேலிய தூதரகத்தில் இடம்பெற்றிருந்த அதேவேளை அமெரிக்காவின் தூதரக நகர்வையடுத்து இச்சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment