
இரு நாட்டுத் தலைவர்களும் நேரடி பேச்சுவார்த்தைக்குச் செல்வது வரை திடீர் மாற்றத்துடன் முன்னேறிச் சென்ற வடகொரிய - அமெரிக்க உறவு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க முன்பதாக வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக இல்லாதொழிக்க இணங்க வேண்டும் எனும் அமெரிக்காவின் நிலைப்பாட்டினை அந்நாட்டின் ராஜாங்க செயலாளர் மற்றும் உப ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு வடகொரியாவை கடாபியின் லிபியாவுக்கு ஒப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், லிபியா போன்று வடகொரியா வீழும் என நினைப்பது படு முட்டாள்த்தனம் என விமர்சித்துள்ள வடகொரியா தாம் ஒரு போதும் இவ்வாறான ஒரு தலைப்பட்சமான நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லையென தெரிவித்துள்ளது. அத்துடன் நேரடியாகவே அமெரிக்க உப ஜனாதிபதியை புத்திக் குறைப்பாடுள்ளவர் என வர்ணித்துள்ள வடகொரியா, ராஜதந்திர நகர்வுகள் பிழைக்கும் பட்சத்தில் அணு ஆயுத போர் தவிர்க்க முடியாததாகும் எனவும் எச்சரித்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் வடகொரியா சிறு குழந்தையென வர்ணித்து வந்த அமெரிக்கா, திடீரென அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்கியழிக்கக் கூடிய வல்லமையை வடகொரியா பெற்றுக்கொண்டதை ஏற்றுக்கொண்டு, ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment