அமைச்சரவை நியமனம் விஞ்ஞானபூர்வமாகவே இடம்பெற்றிருப்பதாகவும் அனைத்து பொறுப்புகளும் பிரதமருக்கும் தனக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னரே பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய அமைச்சரவை நியமனங்களின் பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்த அதேவேளை சுற்றறிக்கை வெளியிட முன்பதாகவே மீண்டும் பொறுப்புகள் தொடர்பில் பரிசீலிக்கவுள்ளதாகவும் விஞ்ஞான ரீதியாக அவை அமைந்துள்ளனவா என சிந்திக்கப் போவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை விஞ்ஞானபூர்வமாகவே அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பதவி நீக்கப்பட்ட விஜேதாச போன்றோரும் மீள அமைச்சராகப் பதவியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment