ஊழல் பேர்வழியான முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்குடன் தொடர்புபட்ட வீடுகளிலிருந்து இன்று மீட்கப்பட்ட பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களில் இலங்கை ரூபாவும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களுள் 2.8 மில்லியன் ரூபா இலங்கை ரூபா நோட்டுக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, பல்வேறு சொகுசு பொருட்களின் மத்தியின் நான்கு டொலர் பாதணியொன்றும் காணப்பட்டுள்ளது.
நஜிபுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் அவரது அரசில் முடக்கப்பட்டிருந்த போதிலும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இவ்வதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment