கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான விசேட கல்வி செயல் அமர்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 19 May 2018

கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான விசேட கல்வி செயல் அமர்வு


கத்தார் வாழ் இலங்கை உலமா கவுன்சில்  கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான இருநாள் கருதரங்கினை  19-20 ம் திகதிகளில் நடாத்த  திட்டமிட்டுள்ளது . 


125 உலமாக்கள்  கலந்து பயன் பெறவுள்ள இச்செயல் அமர்வினை இலங்கையில் இருந்து  விசேட விருந்தினராக  கத்தார்  நாட்டிற்கு வருகை தந்திருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  சபையின் பிரதித்  தலைவர் அஷ்ஷைக்  யுஊ . அகார்  முகம்மத் (நளீமி )அவர்கள்  'அல்குர் ஆ ன்  இ சுன்னாவின் ஒளியில்  முரண்பாட்டு முகாமைத்துவம் என்ற தலைப்பில் விசேட சொற்பொழிவினை நடாத்தவுள்ளார்.

கத்தார் வாழ் இலங்கை உலமா கவுன்சில் அமைப்பின்  தலைவர்  அஷ்ஷைக்: அவ்ன்  அன்சார்  (இஸ்லாஹி )  அவர்களின் தலைமையில்  துஹா  'பீனிக்ஸ்'  பாடசாலையில்  மட்டுப் படுதப்பட்ட தொகையினரை உள்ளடக்கி நடாத்தப்படும்   இச்செயல்  அமர்வு உலமாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்  என  எதிர்பார்க்கப்படுகின்றது .

-எம் .எல் . பைசா ல்  (காசிபி) 

No comments:

Post a Comment