ஹுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபிய நகரான நஜ்ரானை நோக்கி ஏவிய மேலும் ஒரு ஏவுகணை வானிலேயே முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள சுவுதி உள்துறை அமைச்சு.
அண்மைக்காலமாக தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை சவுதி வான் பாதுகாப்பு பிரிவு அவற்றை முறியடித்து வருவதாக தகவல் வெளியிட்டு வருகிறது.
ஈரானிய தயாரிப்பு ஏவுகணைகளே இவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக ஹுதி கிளர்ச்சியாளர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment