
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தேடப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரிலேயே இருப்பதாக இன்டர்போல் மூலம் தகவ் கிடைத்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார் சட்டமா அதிபர்.
அர்ஜுன் மகேந்திரனின் மின்னஞ்சல் முகவரி கூட தெரியாது என முன்னர் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது சிங்கப்பூரிலேயே அவர் இருப்பதாகவும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment