அமைச்சரவையில் உள்ள ஆட்களை மாற்றியதால் மாத்திரம் நாடு கட்டியெழுப்பப் படப்போவதில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
தொழிலாளர் தினத்தை வேறு நாளுக்கு மாற்றியமைப்பதன் மூலம் தொழிலாளர் உரிமைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசின் செயற்பாடுகள் எந்த வகையிலும் மாற்றம் பெறப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அமைச்சரவையின் ஒரு பகுதி மாற்றம் பெற்றிருக்கின்ற நிலையில் நாளைய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, நாளை மறுதினமும் அமைச்சரவை நியமனங்கள் சில இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment