அண்மையில் ஜனாதிபதியுடன் லண்டன் சென்றிருந்த அலி சாஹிர் மௌலானா திரும்ப வந்ததும் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதையடுத்து இது தொடர்பில் ஜனாதிபதி - பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.
ருவன் விஜேவர்தன குழுவினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் அமைச்சரவை மாற்றத்தின் போது கவனத்திற்கொள்ளப்படவில்லையென பின் வரிசை உறுப்பினர்கள் பலத்த அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அலிசாஹிர் மௌலானாவின் திடீர் நியமனம் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதுடன் பிரதமர் கட்சி மட்டத்தில் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக அறியமுடிகிறது.
முஸ்லிம்களுக்கு பவிகளை அள்ளி வழங்கும் கொடையாளனாகத் தாமிருப்பதாக தெரிவித்து வரும் ஜனாதிபதி முன்னாள் விளையாட்டுததுறை பிரதியமைச்சர் ஹரீசை கண்டி அபிவிருத்திக்கான பிரதியமைச்சராக நியமித்துள்ளமை தொடர்பிலும் கிழக்கு வாழ் மக்களிடையே அதிருப்தி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment