சவுதி அரேபியா அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக வருடா வருடம் வழங்கிவரும் பேரீத்தம்பழம் இம்முறை தாமதமாகியதன் காரணமாக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பிரதமரின் உதவியுடன் எட்டரை கோடி ரூபா செலவில் 250 மெட்ரிக் டொன் பேரீத்தம்பழங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
நோன்பு காலமாதலால் மாற்றீடாக தான் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை எதிர்வரும் செவ்வாய் அளவில் சவுதியிலிருந்தும் பேரீத்தம்பழங்கள் வந்து சேரக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment