தொடர் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்க இன்று (3) சோதனை மிகுந்த நாளாக அமைந்துள்ளது.
அவுஸ்திரேலியா மேர்பர்னுக்கான சேவை, ஜித்தா, கோலாலம்பூர் மற்றும் பங்கொக்குக்கான விமான சேவைகள் விமானப் பற்றாக்குறையால் நீண்ட தாமதத்துக்குள்ளாகியுள்ளன.
இதேவேளை, மேலும் இரு விமானங்கள் தொழிநுட்பக் கோளாறு காரணமாக பழுது பார்க்க நேர்ந்துள்ளதுடன் மத்திய கிழக்கிலிருந்து வந்த விமானமொன்று பயணியொருவர் சுகயீனமுற்றதன் காரணமாக கொச்சினுக்குத் திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குவைத்திலிருந்து கொழும்பு வந்த விமானம் இந்தியாவில் வீசிவரும் புழுதிப் புயலில் சிக்கிய காரணத்தினால் உடனடியாக சேவையில் ஈடுபடுத்த முடியாமல் போனதாகவும் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment