பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் தவறிவிட்டதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிள்ளதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகப்பிரிவு.
ராஜபக்ஷகளின் வீடுகளில் லம்போகினி கார்களையும் தங்க குதிரைகளையும் தேடுவதால் பாதாள உலக கோஷ்டிகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு நேரமில்லை எனவும் பாதாள உலக கோஷ்டியினரின் திருண நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாங்கம் மக்களுக்கு வழங்க தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதிலும் இ நாட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசாங்கம் தோல்விகண்டுவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment