நல்லதொரு அமைச்சுப் பொறுப்பைப் பெற வேண்டுமாக இருந்தால் ஊழல் புரிந்த வரலாறு இருக்க வேண்டும் என தான் உணர்வதாக தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
நேற்றைய தினம் மீண்டும் பிரதியமைச்சராக நியமனம் பெற்ற ரஞ்சன், ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் தன் போன்றவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளைப் பெற முடியாது என்பதையும் அவ்வாறு நல்ல அமைச்சுப் பொறுப்பை வசப்படுத்த ஊழல் புரிந்திருப்பதே தகுதியென எண்ணத் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரதுஷ்பிரயோக குற்றச்சாட்டுக்குள்ளாகி பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்ச தற்போது உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment