
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் இயங்கி வரும் இலங்கை நாடாளுமன்றம் அமைந்திருக்கும் காணிக்கான உத்தியோகபூர்வ உறுதிப் பத்திரம் எதிர்வரும் ஜுன் 5ம் திகதியே வழங்கப்படவுள்ள நிலையில் கடந்த 37 வருடங்களாக காணி உறுதிப் பத்திரம் இல்லாமலே நாடாளுமன்றம் இயங்கி வந்திருப்பது தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
எனினும் காணி உறுதிப் பத்திரத்துக்கு பதிலாக 1981 ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சியின் போது செப்புத் தகட்டின் மூலமான உறுதி (தம்ப சன்னஸ்ஸ பத்ர) வழங்கப்பட்டதாகவும் அதன் பின் ரணசிங்க பிரேமதாச காணியின் அளவை விஸ்தரித்து மேலும் ஒரு தம்ப சன்னஸ்ஸ பத்ர வழங்கியுள்ள நிலையில் சுமார் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆயினும் தற்போது மேலும் சில காணிகளும் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய காணி உறுதிப் பத்திரம் எதிர்வரும் 5ம் திகதி உத்தியோகபூர்வமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment