ஒரே இராஜாங்க அமைச்சர் பதவிக்கு எத்தனை தடவைதான் பதவிப் பிரமானம் செய்து கொள்வது எனும் சலிப்பில் நேற்றைய பதவிப்பிரமான நிகழ்வில் தான் கலந்து கொள்ளவில்லையென தகவல் வெளியிட்டுள்ளார் பியசேன கமகே.
கடந்த வருடம் டிசம் மாதமே இராஜாங்க அமைச்சராக பதவியேற்று, இவ்வருடம் ஜனவரி முதல் வேறும் இரு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகள் தரப்பட்டு மீண்டும் நேற்று இன்னொரு பதவிப்பிரமானத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு அடிக்கடி பதவிப்பிரமானம் நடாத்தி எதைக் காண்பது என்பதால் தான் நிகழ்வைப் புறக்கணித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
89ம் ஆண்டிலிருந்து கட்சிக்காகப் பாடுபடும் தனக்கு அமைச்சுப் பதவியொன்றைத் தருவதற்கு கட்சித் தலைமைக்குத் தயக்கம் என்கிற போது அந்நிகழ்வும் இராஜாங்க அமைச்சு பதவியும் பெரிதாகப் படவில்லையென பியசேன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பரில், பியசேன கமகே சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment