நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்படாத காரணத்தினால் ஷஃபானை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து நாளை மறுதினம் வெள்ளியன்று இலங்கையில் ரமழான் முதல் நோன்பு நோற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய விவகார கலாச்சார திணைக்களம் கூட்டாக இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளன.
அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பெரும்பாலான தூர கிழக்கு நாடுகளில் நாளை நோன்பு நோற்பதற்கு ஏற்பதாக புதனிரவு தராவீஹ் தொழுகை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment