ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் தொடர்பில் அக்கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியுடன் இருப்பதாகவும் கட்சிக்குள் விரைவில் பிரளயம் ஒன்று ஏற்படும் எனவும் தெரிவிக்கிறார் ஹிருனிகா.
குழு அமைப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு கேலிக் கூத்தாக மாறியிருப்பதாகவும் எதிர்காலத்தில் ரணிலின் நடவடிக்கைகளுக்கு பின் வரிசை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை மாற்றமும் திருப்திகரமாக இல்லையென ஹிருனிகா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment