கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகளை அரங்கேற்றியதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட அமித் உட்பட்ட குழுவினரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 34 பேரடங்கிய குறித்த குழுவினரை எதிர்வரும் ஜுன் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது தெல்தெனிய நீதிமன்றம்.
இதற்கிடையில் அமித் வீரசிங்க மீது சிறைச்சாலை வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தாக்குதல் நடாத்தியதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment