மருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா - sonakar.com

Post Top Ad

Sunday, 27 May 2018

மருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா

சாய்ந்தமருது கமு/அல்-ஜலால் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “அல்-ஜலாலியன்ஸ் டே-2018“ எனும் தொனிப்பொருளில் முப்பெரும் விழாவும், இப்தார் நிகழ்வும்  (25) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.எஸ். நபார் தலைமையில் நடைபெற்றது.
இங்கு பாடசாலையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான விருது வழங்குதல், ஆசிரியர்கள் கௌரவிக்கப்படல் மற்றும் மாபெரும் இப்தார் இராப்போசனமும் வழங்கப்பட்டது. மௌலவி ஏ.ஆர்.எம். அஷ்ஹர் விசேட மார்க்கச் சொற்பொழிவினை நிகழ்த்தினார்.
விழா அறிமுக உரை நிகழ்த்திய பழைய மாணவர் சங்க கல்வி பிரிவு தலைவரும் விழா ஏட்பாட்டு குழு செயலாளருமான  என்.ஜேஇசட்அனஸ் இந்த பாடசாலையின் வளர்ச்சியில் இனிவரும் காலங்களில்எங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்க எமது சங்கம் உறுதியாக இருப்பதாகவும் பாடசாலை தரப்பிலும் எங்களுக்கு முழு உத்துழைப்புத் தேவை என வலியுறுத்தியதோடு கடந்த கால கல்வி நிலைகள்பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் உரையாற்றிய பாடசாலை அதிபர்  எம்.எஸ் நபார்இன்றைய நிகழ்வுக்கு வித்திட்டதான அண்மையில் நடந்தேறிய ஆலம் விழுது நிகழ்வை செய்த வியூகம் தொலைக்காட்சி பணிப்பாளர் ஜனூஸ்சம்சுதீனுக்கு நன்றி தெரிவித்து பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்ததுடன்  பழைய மாணவர்கள் சங்கத்தின் அவசியம் பற்றி  கூறினார்.


இந்நிகழ்வில் கமு- கமு-அல் ஜலால் வித்தியாலய பிரதி அதிபர் ரீ.கே.எம். சிராஜ், ஆசிரியர்கள், கடந்த காலத்தில் கடமையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலை அதிபர்களான எம்.ஐ.எம்.இல்யாஸ், எம்.ஐ. சம்சுதீன், எம்.எஸ்.மதனி  ஆகியோருடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான முஹர்ரம் பஸ்மீர், என்.எம்.றிஸ்மிர் மற்றும் பிராந்திய உணவு மருந்து பரிசோதகரும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தவிசாளருமான எஸ்.தஸ்தகீர் உட்பட பல முக்கிய  பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வுகளுக்கு பிரதான அனுசரனையை கெபிடல் எப்.எம். நிறுவனத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-எஸ்.அஷ்ரப்கான்

No comments:

Post a Comment