இந்த அரசு ஆட்சிப்பொறுப்பையேற்று மூன்று வருடங்களாக என்ன செய்திருக்கிறது என ஒரு சிலர் கேள்வி கேட்கிறார்கள், தற்போது நாங்கள் செய்து கொண்டிருக்கும் அபிவிருத்திப் பணியின் நன்மைகளை இன்னும் சில வருடங்களில் மக்கள் அனுபவிப்பார்கள் என தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
100 நாட்களில் நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போவதாக கவர்ச்சிகர பிரச்சாரங்களுடன் 2015 தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும் அரச இயந்திரத்தை மாற்றவோ, சிறுபான்மை மக்கள் அச்ச சூழ்நிலையில் வாழ்வதைத் தடுக்கவோ முடியாத ஆட்சிப் பொறுப்பையேற்ற கூட்டாட்சி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் படு தோல்வியடைந்தது.
இந்நிலையிலேயே, தற்போது தமது அரசு முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளின் நன்மைகளை இன்னும் சில வருடங்களில் அனுபவிக்கலாம் என ரணில் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment