திகன வன்முறை சூத்திரதாரி, மஹசோன் பலகாய இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க எனும் நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலை ஊழியர் அமித்தைத் தாக்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அநுராதபுர சிறைச்சாலை வைத்தியசாலை ஊழியரே இவ்வாறு தாக்கியுள்ள நிலையில் அமித் வீரசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அதற்கான பின்னணி என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்கவில்லை. எனினும் கூட்டாட்சி அரசில் முக்கிய நபர்கள் கைதானதும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதி பெறும் வழக்கமே தொடர்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் தாக்கிய நபர் வாரியபொல சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment