பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்சவே தெரிவு செய்வார் எனவும் அவர் தெரிவு செய்யும் நபரின் வெற்றிக்காக பெரமுன உழைக்கும் எனவும் தெரிவிக்கிறார் அக்கட்சியின் பினாமித் தலைவர் ஜி.எல். பீரிஸ்.
20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி மூலம் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அவ்வாறில்லையேல் ஏலவே இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த மீண்டும் போட்டியிட முடியாது என்பதால் வேறு ஒருவரையே தெரிவு செய்ய வேண்டும்.
கோத்தபாயவின் பெயரே முன்னணியில் இருக்கின்ற போதிலும், மஹிந்தவே வேட்பாளரை தெரிவு செய்வார் என கோத்தா உட்பட பெரமுனவினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment