இந்திய வர்த்தகர் ஒருவரிடம் 20 கோடி ரூபா லஞ்சம் பேரம் பேசி அதில் 2 கோடி ரூபாவைப் பெறும் வேளையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலக பிரதானி மகநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவருக்கும் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கந்தளாய் சீனித் தொழிற்சாலை பங்கு விற்பனையின் பின்னணியில் 56 கோடி ரூபா லஞ்சம் பேசி, அதனை 20 கோடி ரூபா வரை குறைத்துக் கொண்ட குறித்த நபர்கள் முற்பணமாக 2 கோடி ரூபா பெற்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment