தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
நேற்றிரவு மீறாவோடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், எதிர்காலத்தில் தொழில் ரீதியாக அரச மற்றும் தனியாரோடு இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம்.
தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து தொழில் துறைகளை உங்கள் போன்ற இளைஞர்களுக்கும் பகிர்ந்து செய்வதற்கான வேலைத் திட்டங்களை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த பணியில் உங்களையும் இணைந்து நாங்கள் கௌரவப்படுத்துவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-அனா
No comments:
Post a Comment