லெஸ்டர் பீரிசின் 'விருதை' தேடி பிரத்யேக பொலிஸ் குழு! - sonakar.com

Post Top Ad

Friday, 4 May 2018

லெஸ்டர் பீரிசின் 'விருதை' தேடி பிரத்யேக பொலிஸ் குழு!


பிரபல சினிமா கலைஞர், காலஞ்சென்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் இறுதி அஞ்சலி நிகழ்வின் போது திருடப்பட்டுள்ளதாகக் கருதப்படும்  இந்திய அரசினால் வழங்கப்பட்ட தங்க மயில் விருதினைத் தேடி பிரத்யேக பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்தி விரைவில் கண்டுபிடிக்குமாறு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் பொலிஸ் படையை நியமித்துள்ளார் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.

சிறு குற்றங்களுக்காகத் தேடப்படுவோரை சில மணி நேரத்துக்குள் ஆயிரக்கணக்கில் அள்ளிச்செல்லும் ஸ்ரீலங்கா பொலிஸ், நான்கு விசேட படையணிகளை நியமித்தும் மறைந்திருந்த ஞானசாரவைக் கண்டுபிடிக்க இயலாமல் போயிருந்ததுடன் கணப்பொழுதில் அவர் பிணையில் விடுதலையாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment