ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரும் மிக் ஊழல் விவகாரத்தில் தேடப்பட்டு வருபவருமான உதயங்க வீரதுங்க இன்டர்போலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தான் தூதுவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் எந்தவொரு ஆயுத கொள்வனவோ, பண மோசடியிலோ ஈடுபடவில்லையெனவும் தனக்கெதிரான சிவப்பு நோட்டீசை விலக்கிக் கொள்ளும்படியும் கோரியே உதயங்க கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
உதயங்கவைக் கையளிப்பது தொடர்பான அமீரகத்தின் முடிவுக்காகக் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment