மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் பணம் பெற்ற 118 பேரின் பெயர்கள் தனக்குத் தெரியும் என கூறியுள்ள தயாசிறி ஜயசேகர அவற்றை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார் பாலித ரங்கே பண்டார.
அர்ஜுன் அலோசியசின் நிறுவன குழுமத்திலிருந்து தயாசிறிக்கும் 1 மில்லியன் ரூபா காசோலை சென்றிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. எனினும், அது தன்னுடைய பெயருக்கு வழங்கப்படவில்லையெனவும் யாரோ வழங்கிய நன்கொடையெனவும் தயாசிறி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தயாசிறி தனக்குத் தெரிந்த பெயர்களை வெளியிட வேண்டும் என ரங்கே பண்டார கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment