பலஸ்தீன நிர்வாக தலைவர் மஹ்மூத் அப்பாசைக் கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை குவைத் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன நாடாளுமன்றில் உரையாற்றிய அப்பாஸ், யூத நாடு ஒன்று இப்பகுதியில் இருந்ததாக வரலாறு இல்லை, அது ஐரோப்பியர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றம் எனவும் பணம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு மூலம் இஸ்ரேல் ஐரோப்பியர்களுடன் நெருங்கியிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
இது சமாதானத்துக்குப் பாதகமாக அமையும் எனக் கூறி அமெரிக்கா அப்பாசை கண்டிக்கும் வகையில் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தது. எனினும், நேற்றைய தினம் குவைத் மேற்கொண்ட முயற்சியால் பாதுகாப்பு கவுன்சிலில் பிரேரணை தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment