வனஜீவராசிகள் அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம் பெற்றதையடுத்து காட்டிலிருக்கும் மான்கள் மற்றும் விலங்குகள் அலறி ஓடுவதாக அண்மையில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பதிலளித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.
மஹிந்த ஆட்சியில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் மான், மரை, காட்டுன் பன்றி, காட்டுக் குருவி மாமிசங்கள் பகல் உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்ததாகவும் தற்போது தான் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையேற்றுள்ளதாலேயே மஹிந்தவுக்கு கோபம் வருவதாகவும் பொன்சேகா விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை மஹிந்தவுக்கு வாலாட்டிக்கொண்டிருக்கும் விமல் வீரவன்சவுக்கு கடந்த அரசில் 'நாய் அமைச்சு' வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment