ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து தமது தூதரகத்தை ஜெரூசலத்துக்கு அமெரிக்கா நகர்த்தியுள்ள நிலையில் அங்கு இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட கண்மூடித் தாக்குதல்களினால் அண்மையில் 60க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அவசரமாக யுத்த குற்ற விசாரணைக்கான விசேட குழுவொன்றை அங்கு அனுப்ப தீர்மானித்துள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில் அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் எதிர்த்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக்கொண்டுள்ள அதேவேளை விரைவில் அங்கு விசாரணைக்குழு செல்வதோடு அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment