தியதலாவ, விமானப் படை பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் கைக்குண்டு தவறி வெடித்ததில் மூவர் காயமுற்ற சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெண் ஒருவரே இவ்வாறு காயமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தவறுதலாகவே இடம்பெற்றதாக விமானப் படை பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment