ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூடி ஆராயவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கு அண்மையில் உயர் கல்வியமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் உதவித் தலைவருமான ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும், அண்மைய மறுசீரமைப்பின் போது ரவி கருணாநாயக்கவுக்கு பதவி வழங்கப்படாத நிலையில் தொடர்ந்தும் கட்சி மட்டத்தில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment