சஜித் பிரேமதாசவை அடுத்த தலைவராக அறிவிக்கக் கோரிக்கை! - sonakar.com

Post Top Ad

Thursday, 3 May 2018

சஜித் பிரேமதாசவை அடுத்த தலைவராக அறிவிக்கக் கோரிக்கை!


ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே நிலைத்து வரும் நிலையில் கட்சியின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாசவின் பெயர் அறிவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.



பல வருடங்களாக கட்சித் தலைவராக சஜித் வர வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரு அணிகள் இயங்கி வந்தன. எனினும் 2015 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 2014 இறுதியில் ரணில் - சஜித் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்த நிலையில் கட்சித் தலைமைத்துவம் பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அண்மைய உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியின் பின் கட்சித் தலைமை மாற்றப்பட வெண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்ற போதிலும், மறு சீரமைப்பு எனும் பெயரில் மீண்டும் ரணிலிடமே தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் அதனை சஜித்தும் ஏற்றுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment