சொல்ல வேண்டிய நேரத்தில் பதில் சொல்வேன்: ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 May 2018

சொல்ல வேண்டிய நேரத்தில் பதில் சொல்வேன்: ஜனாதிபதி!




மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனும் பகிரங்க அறிவிப்புடன் பொது வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன, அது தொடர்பில் தனது தெளிவான பதிலை இப்போது சொல்லப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.



தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் அது குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லையெனவும் அவ்வாறு பேசுவது நாட்டின் அரசியலில் குழப்ப சூழ்நிலையை உருவாக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாட்டை ஸ்திரப்படுத்தக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கத் தவறியது தனது தவறில்லையெனவும் அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதில் தாமதம் வரப் போவதில்லையெனவும் மைத்ரிபால சிறிசேன லண்டனில் வைத்து வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment