ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும மற்றும் அமீர் அலி ஆகியோருக்கு தொடர்ந்தும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசை விமர்சித்து வந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஐ.தே.க உயர் மட்டத்தில் அதிருப்தி நிலவி வந்த போதும் தொடர்ந்தும் அவர் சமூகவலுவூட்டல் பிரதியமைச்சராகவும் தனது அமைப்பாளர் பதவியையும் துறந்த பாலித தெவரப்பெரும நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார பிரதி அமைச்சராக அமீர் அலியும் நியமனம் பெற்றுள்ளனர்.
இதேவேளை, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment