அட்டாளைச்சேனையில் பெண்களுக்கான இஸ்லாமிய மாநாடு - sonakar.com

Post Top Ad

Friday, 18 May 2018

அட்டாளைச்சேனையில் பெண்களுக்கான இஸ்லாமிய மாநாடு


புனிதமிக்க நோன்பு மாத்தினை பயனுள்ளதாக மாற்றியமைக்கும் பொருட்டு பெண்களுக்கான மாபெரும் இஸ்லாமிய மாநாடொன்றினை அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய அமைப்பு எதிர்வரும் 2018.05.20ஆந் திகதி ஏற்பாடு செய்துள்ளது.


குறித்த மாநாடு அன்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி முதல் நண்பகல் 12.00வரை இடம்பெறவுள்ளது. மேற்படி மாநாட்டில் ரமழானும் இறையச்சமும், நரகத்தை அஞ்சும் பெண்கள் மற்றும் மரணத்திற்கு முன் என்கிற தலைப்புகளில் அஷ்ஷேஹ் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி, அஷஷேஹ் முனாஜித் ஷீலானி, இத்ரீஸ் ஹசன் ஸஹ்வி ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

குறித்த மாநாட்டில்  பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அமைப்பின் தலைவர் அஷ்ஷேஹ் முபீன் (ஷஹ்வி) அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-றிசாத் ஏ காதர்

No comments:

Post a Comment