கடந்த டிசம்பருடன் நிறைவுக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடையேயான கூட்டாட்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த வாரம் புதுப்பிக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய செயலாளர் அகில விராஜ் காரியவசம் - துமிந்த திசாநாயக்க இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள அதேவேளை 2020 வரை கூட்டாட்சி தொடரும் என்பதில் இரு தரப்பும் திடமாகவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சு.க தரப்பில் சரத் அமுனுகம ஆகியோரின் மேற்பார்வையில் இவ்வொப்பந்தம் தயாராகி இருக்கின்றமையும் டிசம்பருடன் சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டை மைத்ரி இழந்துவிடுவார் என மஹிந்த ராஜபக்ச கடந்த வருடம் தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment