கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வந்தால் அவருக்கான கட்டுப்பணத்தைத் தாமே செலுத்தத் தயார் என தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
எப்படியும் கட்டுப்பணத்தையிழந்து கோத்தா கைச்சேதப்படப்போகிறார். முன்னரும் இவ்வாறு தனது வீட்டில் வந்து அமர்ந்து பணம் வாங்கிக் கொண்டு போன பழக்கம் கோத்தாவுக்கு இருப்பதனால் அவருடைய கட்டுப்பணத்தைத் தானே செலுத்தத் தயார் என தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.
கோத்தபாய தேர்தலில் வெல்வதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது எனவும் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment