அர்ஜுன் அலோசியசின் நிறுவன குழுமத்திலிருந்து தயாசிறி ஜயசேகரவுக்கும் 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையொன்று வழங்கப்பட்ட விடயம் தொடர்பான தகவல் வெளியாகியிருந்த நிலையில் இன்று நாடாளுமன்றில் அதற்கு பதிலளித்துள்ளார் தயாசிறி.
குறித்த காசோலை யாரிடமிருந்து வந்தது? யாருக்காக தரப்பட்டது என்று தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ள அவர், தனது பெயருக்கு அவ்வாறு ஒரு காசோலை தரப்படவில்லையெனவும் இனிமேலேயே அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதெவேளை, குரூப் 16 உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொருவர் மீதும் இனி பழி சுமத்தப்படும் எனவும் தயாசிறி மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment