
கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவே முன்நிறுத்தப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ச அனுமதித்தால் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் வானொலி நிகழ்ச்சியொன்றில் வைத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
இதேவேளை, கோத்தபாய அமெரிக்க பிரஜாவுரிமையுள்ளவர் என்பதால் போட்டியிட முடியாது என நம்பப்படுகின்றமையும் அதனை விட்டுக் கொடுப்பதற்கு அவர் முயற்சி செய்த போதிலும் அமெரிக்கா பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய மறுத்துள்ளதாகவும் ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment