அமைச்சரவை மாற்றம் என்பது ஏதோ ஒரு சாதாரண குழுவின் மாற்றமின்றி ஆட்சியின் மறுசீரமைப்பாக இருந்திருக்க வேண்டும் எனவும் ஆனாலும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.
20 வருடங்கள் எதிர்க்கட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினால் தமது தொண்டர்களுக்கு எதையும் செய்து கொடுக்க முடியாமல் போய்விட்டது எனவும் தெரிவித்துள்ள அவர், தற்போது ஆட்சியிலிருந்தும் அதே நிலைதான் எனவும் இப்படியே சென்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயாராக வேண்டியதுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் பாரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக பெரும்பாலனவர்கள் கருத்துரைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment