பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகந்துர, கோனவில பகுதியில் இயங்கி வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காரில் வந்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முகமூடியணிந்து காரில் வந்த நபர்கள் ஊழியர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்கள் கையில் இருந்த 70 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment