மஹிந்த ராஜபக்ச அரசின் ஊழல் விவகாரங்களை விசாரணை செய்வதற்கு இடையூறாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை உடனடியாக அலுவலகம் சென்று தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
நாளைய தினம் மேலும் சில அமைச்சுப் பதவிகளுக்கான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உயர் கல்வியமைச்சராகப் பொறுப்பேற்ற விஜேதாச உடனடியாக கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
தானாகப் பதவி விலகிய ரவி கருணாநாயக்கவும் அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment