நாங்கள் தெளிவாகத் தான் இருக்கிறோம்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Sunday, 6 May 2018

நாங்கள் தெளிவாகத் தான் இருக்கிறோம்: கம்மன்பில


கூட்டு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தாம் மிகத் தெளிவாக இருப்பதாகவும் வெளியாருக்கு இருக்கும் பிரச்சினை தமக்குள் இல்லையெனவும் தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பெரும்பாலும் கோத்தபாய ராஜபக்சவே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இரட்டைக்குடியுரிமையுள்ள கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் கோத்தபாய தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேவேளை மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment