
மாலியிலிருந்து பிரான்சுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றிருந்த நிலையில் மாடி வீடொன்றிலிருந்து தவறி வீழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையொன்றைத் துரிதமாக செயற்பட்டு வந்த நபருக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பாராட்டிப் பதக்கம் வழங்கியுள்ளதுடன் அவருக்கு குடியுரிமை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மமூத் கசாமா என அறியப்படும் இளைஞரே இவ்வாறு சாகசம் புரிந்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
தவறி விழுந்த குழந்தையை ஒருவர் பற்றிப் பிடித்துக் கொண்ட போதிலும் அவரால் குழந்தையை மீண்டும் தூக்கிக் கொள்ள முடியாத நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்க, அவ்வழியே சென்ற குறித்த நபர் துரிதமாக கட்டிடத்தில் ஏறி இச்சாதனையைப் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment